இந்தியன் வெல்ஸ்: சகோதரியிடம் தோல்வி அடைந்த செரீனா வில்லியம்ஸ்

கலிஃபோர்னியாவில் நடந்து வரும் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர், அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். பெண்கள் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
 | 

ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில், ரோஜர் பெடரர் 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பிலிப் க்ராஜினோவிச்சை வீழ்த்தினார். நாளை நடக்க இருக்கும் நான்காவது சுற்று போட்டியில் பெடரர், பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்கொள்ள இருக்கிறார். 

பெண்கள் ஒற்றையரில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் மூன்றாவது சுற்றில் மோதினார். இதில், வீனஸ் 6-3, 6-4 என்ற கணக்கில் செரீனாவை தோற்கடித்தார். 2014ம் ஆண்டுக்கு பின் செரீனாவை முதன்முறையாக வீனஸ் வென்றிருக்கிறார்.

மற்றொரு போட்டியில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோன் ஹாலேப், இரண்டாம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP