ஸ்டட்கார்ட் ஓபன்: பெடரருடன் மோதும் வாய்ப்பை இழந்த குன்னேஸ்வரன்

உலகில் நம்பர் 2 ரோஜர் பெடரருடன் மோதும் வாய்ப்பை இந்திய வீரர் பிரஜ்நேஷ் குன்னேஸ்வரன் தவறவிட்டார்.
 | 

ஸ்டட்கார்ட் ஓபன்: பெடரருடன் மோதும் வாய்ப்பை இழந்த குன்னேஸ்வரன்

உலகில் நம்பர் 2 ரோஜர் பெடரருடன் மோதும் வாய்ப்பை இந்திய வீரர் பிரஜ்நேஷ் குன்னேஸ்வரன் தவறவிட்டார். 

ஏடிபி சாம்பியன்ஷிப் தொடரான ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் குன்னேஸ்வரன், 6-7, 3-6 என்ற கணக்கில் 75 இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் கிடோ பெல்லாவிடம் வீழ்ந்தார். 

இதனால் அடுத்த போட்டியில் நம்பர் 2 வீரர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் மோதும் வாய்ப்பை அவர் இழந்தார். குன்னேஸ்வரனுக்கு, இது முதல் ஏடிபி உலக டூர் போட்டியாகும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP