தொடர் செட்களில் வீழ்ந்த செரீனா: சாம்பியன் பட்டம் வென்றார் கெர்பர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் உலகின் தலைசிறந்த விராங்கனை செரீனா வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கெர்பர்.
 | 

தொடர் செட்களில் வீழ்ந்த செரீனா: சாம்பியன் பட்டம் வென்றார் கெர்பர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் உலகின் தலைசிறந்த விராங்கனை செரீனா வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கெர்பர்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடரின், மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கத்தில், செரீனா வில்லியம்ஸின் முதல் சர்வீஸையே முறியடித்து அதிர்ச்சி அளித்தார் கெர்பர். எனினும், செரீனா வில்லியம்ஸ் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3- 2 என முன்னிலைப் பெற்றார். ஆனால், செரீனா செய்த தவறுகளைப் பயன்படுத்திக் கொண்ட கெர்பர் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கெர்பர், இரண்டாவது செட்டிலும் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-3 என கைப்பற்றி, தனது முதலாவது விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த வெற்றி மூலம் கடந்த 2016ம் ஆண்டு விம்பிள்டனில் செரீனாவிடம் அடைந்த தோல்விக்கு பழித்தீர்த்துக் கொண்டார் கெர்பர். மேலும், 1996ல் ஸ்டெபி கிராப்புக்கு பிறகு, விம்பிள்டன் பட்டம் வென்ற 2வது ஜெர்மனி வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் செரீனாவின் கனவு முறிந்தது. 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த செரீனா, 24வது பட்டத்தை வென்று மார்கெரேட் கோர்ட் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
குழந்தை பிறந்த பிறகு செரீனா பங்கேற்ற, பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில், காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். விம்பிள்டனில் அவர் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP