பிரெஞ்சு ஓபன்: செரீனா - ஷரபோவா மோதல்

பிரெஞ்சு ஓபன் நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ்- மரியா ஷரபோவா மோதுகின்றன.
 | 

பிரெஞ்சு ஓபன்: செரீனா - ஷரபோவா மோதல்

பிரெஞ்சு ஓபன் நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ்- மரியா ஷரபோவா மோதுகின்றன. 

பாரிஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்று போட்டி பெண்கள் பிரிவில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற கணக்கில் ஜெர்மனின் ஜூலியா ஜார்ஜெஸை வீழ்த்தினார். 

மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-2, 6-1 என செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவாவை தோற்கடித்தார். 

இதன் மூலம், இன்று நடக்க இருக்கும் நான்காவது சுற்று போட்டியில் வில்லியம்ஸ் - ஷரபோவா மோத உள்ளன. இரண்டு பேருமே கம்பேக் வீராங்கனைகள் என்பதால், ரசிகர்களிடையே இவர்களது ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்றில், செரீனா - வீனஸ் வில்லியம்ஸ் இணை, 4-6, 7-6, 0-6 என அன்றெஜா - மரியா கூட்டணியிடம் தோற்று வெளியேறியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP