கோப்பை இல்லாமல் நம்பர் 1 இடம் எதுக்கு: சிமோன் ஹாலப்

கிராண்ட் ஸ்லாம் கோப்பை இல்லாமல் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது முழுமையான வெற்றி அல்ல என்று பிரெஞ்ச் ஓபன் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சிமோன் ஹாலப் தெரிவித்துள்ளார்.
 | 

பாரிஸ் நகரில் நடந்த கிராண்ட் ஸ்லாம் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி தனது முதல் கிரணாட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் ருமேனியாவின் சிமோன் ஹாலப். கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாட தொடங்கி 9 ஆண்டுகள் ஆன பிறகு சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஹாலப் தற்போது சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். 

இதுகுறித்து  அவர் கூறும் போது, "எனது பயிற்சியாளர் டேரன் காஹில், இது தான் உனது நேரம்.. கோப்பை உன்னுடையது, மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதே என்றார். அவர் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை அளித்தன. அவர் எனக்கு மட்டும் தான் தற்போது பயிற்சியளித்து வருகிறார். எனவே என் மீது சிறப்பான கவனம் செலுத்துகிறார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் இல்லாமல் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பது முழுமையான வெற்றி அல்ல" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP