ஃபெடரர், ஷரபோவா, கெர்பர் ஆஸ்திரேலிய ஒபனில் இருந்து நாக் அவுட்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில், நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், வீராங்கனைகள் மரியா ஷரபோவா மற்றும் கெர்பர் ஆகியோர், அதிர்ச்சி தோல்வியடைந்து நாக் அவுட் செய்யப்பட்டுள்ளனர்.
 | 

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஃபேல் நடால், தாமஸ் பெரிடிக்கை நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை, 20 வயதேயான ஸ்டெபானோஸ் ஸீட்சிபாஸ், 6(11)-7(13), 7-6, 7-5, 7-6 என்ற போராடி வீழ்த்தியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதே போல, பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அமெரிக்க வீராங்கனை டேனியல்லா காலின்ஸ், ஜெர்மன் வீராங்கனை கெர்பரை 6-0,6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி, நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவாவை 4-6, 6-1, 6-4 என போராடி வீழ்த்தினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP