Logo

4வது விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்

இங்கிலாந்தில் நடைப்பெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
 | 

4வது  விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்

இங்கிலாந்தில் நடைப்பெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இரண்டு ஆண்டுகள் காயத்தால் அவதி, அறுவை சிகிச்சை, நம்பர் ஒன் இடத்தில் இருந்து 20ம் இடத்திற்கு தள்ளப்பட்டது என பெரும் அடிக்கு பிறகு இந்தாண்டு மீண்டும் தான் தான் கிங் என நிரூபித்து இருக்கிறார் நோவாக் ஜோக்கோவிச். லண்டனில் நடைபெற்று வந்த பாரம்பரியமான விம்பிள்டன் போட்டிகள் 1887ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் மற்றும் தென் ஆப்ரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் விளையாடினர். 

இந்த போட்டியில் தரவரிசையில் 12வது இடத்தில் இருக்கும் ஜோக்கோவிச்  6-2, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் கெவின் ஆண்டர்சனை எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இது ஜோக்கோவிச் வெல்லும் 4வது விம்பிள்டன் பட்டமாகும். முன்னதாக 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் அசத்தியவர் ஜோக்கோவிச். மொத்தமாக அவர் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

பட்டம் வென்றதற்காக அவருக்கு ரூ. 20 கோடி பரிசு தொகை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டாவது இடத்தை பிடித்த கெவின் ஆண்டர்சனுக்கு ரூ. 10 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 

4வது  விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்

வெற்றிக்குப் பின் பேசிய ஜோக்கோவிச், "என் மகன் முன்பு இந்த கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைத்தது உணர்ச்சிகரமாக உள்ளது. கடைசி இரண்டு வருடங்கள் எனக்கு கடினமானதாக இருந்தது. இப்போது அதைப்பற்றி பேசுவது எளிமையான ஒன்றாகிவிட்டது, ஆனால் என் மீது நான் நம்பிக்கை வைத்திருந்தேன். எனக்கு அறுவை சிகிச்சை நடந்த போது 6 மாதங்களுக்கு விளையாடவே இல்லை. அது தான் எனக்கு ஏற்பட்ட மிக பெரிய காயம் இது தான். விம்பிள்டன் போன்ற டென்னிஸுக்கு புனிதமான இடத்தில் மீண்டும் வெல்வதை காட்டிலும் பெரிய விஷயம் ஒன்றுமில்லை" என்றார். அவர் கோப்பையை வாங்கும் போது அவரது 3 வயது மகன்  ஜோக்கோவிச்சை உற்சாகப்படுத்தினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP