முதல்முறையாக சின்சினாட்டி கோப்பையை கைப்பற்றினார் ஜோகோவிச்!

உலக டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடம் வகிக்கும் ரோஜர் பெடரரை வீழ்த்தி சின்சினாட்டி ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் நோவக் ஜோகோவிச்.
 | 

முதல்முறையாக சின்சினாட்டி கோப்பையை கைப்பற்றினார் ஜோகோவிச்!

உலக டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடம் வகிக்கும் ரோஜர் பெடரரை வீழ்த்தி சின்சினாட்டி ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் நோவக் ஜோகோவிச். 

ஓஹியோவில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடந்த இறுதிச் சுற்று போட்டியில் 2ம் இடம் வகிக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - 10ம் இடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் மோதினர். போட்டியில் ஜோகோவிச், 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 7 முறை சாம்பியனான பெடரரை வென்றார். 

இதன் மூலம், முதல் சின்சினாட்டி ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச். ஆறு இறுதிச் சுற்றுகளுக்கு பிறகு சின்சினாட்டி ஓபன் டைட்டிலை ஜோகோவிச் வென்றுள்ளார். மேலும், இந்த போட்டியில் தான் எதிர்கொண்ட 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 போட்டியில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்ற முதல் போட்டியாளர் ஜோகோவிச்.

2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிச் சுற்றுக்கு பிறகு, இருவரும் இப்போட்டியில் முதன்முறையாக மோதினர். இருவரும் நேருக்கு நேராக மோதுவது இது 46-வது முறையாகும். 

பெடரர், தனது 99-வது டைட்டிலை வெல்ல நினைத்தார். ஆனால் அதில் தோல்வி கண்ட அவர், அடுத்ததாக யுஎஸ் ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருக்கிறார். 

முழங்கை காயம் காரணமாக கடந்த ஒரு சீசன் முழுவதும் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்காத ஜோகோவிச், விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி சிறந்த காம்பேக்கை கொடுத்தார். தற்போது சின்சினாட்டி ஓபன் டைட்டிலையும் வென்றிருப்பது அவருக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதனால் யுஎஸ் ஓபன் போட்டியில் உற்சாகமாக களமிறங்க இருக்கிறார் ஜோகோவிச்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP