ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிப் போட்டிக்குள் சீறினார் ஜோகோவிச்!

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் தலைசிறந்த வீரராக கருதப்படும் நோவாக் ஜோகோவிச், அரையிறுதிப் போட்டியில் பிரென்ச் வீரர் போல்லியை நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் மீண்டும் நுழைந்தார்.
 | 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், உலக நம்பர் 1 வீரரான நோவாக் ஜோகோவிச், பிரென்ச் வீரரான போல்லியை அரையிறுதி போட்டியில் சந்தித்தார். அதிகபட்சமாக 6 முறை ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட்டத்தை கைப்பற்றும் நோக்கில் அட்டகாசமாக விளையாடி வருகிறார். 

ஏற்கனவே இறுதி போட்டிக்குள் இரண்டாம் நிலை வீரரான நடால் நுழைந்துள்ள நிலையில், ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். துவக்கம் முதல் இறுதி வரை போல்லிக்கு கடும் நெருக்கடி கொடுத்து, 6-0, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

7வது முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிக்குள் நுழைந்துள்ள ஜோகோவிச், இதுவரை ஒரே ஒரு ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை மட்டுமே வென்றுள்ள நாடாலுடன் மோதும் போட்டியின் மீது கடும் எதிர்பார்ப்பு உள்ளது. வரும் ஞாயிறு அன்று, இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் ராட் லாவர் மைதானத்தில் நடைபெறுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP