யுஎஸ் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 55ம் இடம் வகிக்கும் ஜான் மில்மனை வீழ்த்தினார்.
 | 

யுஎஸ் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 55ம் இடம் வகிக்கும் ஜான் மில்மனை வீழ்த்தினார். 

நான்காவது சுற்றில் 2ம் இடம் வகிக்கும் ரோஜர் பெடரரை, மில்மன் வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில், மில்மனை தோற்கடித்திருக்கும் ஜோகோவிச், 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்காக முனைப்பு காட்டி வருகிறார்.

அரையிறுதி போட்டியில் ஜோகோவிச், ஜப்பானின் கெய் நிஷிகோரியை 8ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP