ஹாலே ஓபனில் தோல்வி; நம்பர் ஒன் இடத்தை இழந்தார் பெடரர்

ஹாலே ஓபன் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டு, நம்பர் ஒன் இடத்தை இழந்தார் ரோஜர் பெடரர்.
 | 

ஹாலே ஓபனில் தோல்வி; நம்பர் ஒன் இடத்தை இழந்தார் பெடரர்

ஹாலே ஓபன் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டு, நம்பர் ஒன் இடத்தை இழந்தார் ரோஜர் பெடரர். 

ஜெர்மனியில் க்ராஸ்கோர்ட் டென்னிஸ் போட்டியான ஹாலே ஓபன் நடைபெற்று வந்தது. இதன் இறுதிச் சுற்று போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், குரோவேஷியாவின் போர்னா கோரிக்குடன் மோதினார். இப்போட்டியில் 21 வயதான கோரிக், 7-6(6), 3-6, 6-2 என்ற கணக்கில் பெடரரை வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

தோல்வியால், தனது 99-வது சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட பெடரர், நம்பர் ஒன் இடத்தையும் இழந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின், க்ராஸ்கோர்ட்டில் பெடரரின் முதல் தோல்வி இதுவாகும். 

பெடரர் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டதை அடுத்து, ஸ்பெயினின் ரஃபேல் நடால் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், 21-வது இடத்திற்கு கோரிக் முன்னேறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP