டேவிஸ் கோப்பை: இந்திய அணிக்கு திரும்பினார் லியாண்டர் பயஸ்

டேவிஸ் கோப்பை: இந்திய அணிக்கு திரும்பினார் லியாண்டர் பயஸ்
 | 

டேவிஸ் கோப்பை: இந்திய அணிக்கு திரும்பினார் லியாண்டர் பயஸ்

டேவிஸ் கோப்பை: இந்திய அணிக்கு திரும்பினார் லியாண்டர் பயஸ்

சீனாவுக்கு எதிராக நடக்க இருக்கும் டேவிஸ் கோப்பைக்கான இந்திய டென்னிஸ் அணியின் லியாண்டர் பயஸ் இடம் பிடித்துள்ளார். 

சீனாவின் தியான்ஜின் நகரில் ஏப்ரல் 6-7 நடைபெற இருக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானியா குரூப்-1ல் இந்தியா- சீனா மோத இருக்கின்றன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், இந்தியாவின் முன்னணி வீரர் லியாண்டர் பயஸுக்கு இடம் கிடைத்துள்ளது. 

கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடந்த டேவிஸ் கோப்பை போட்டியில் பயஸ் இடம் பெறாதது அதிருப்தி அடையச் செய்தது. அதன்பிறகு நடைபெற்ற உலக பிளே-ஆப் சுற்றில் கனடாவுக்கு எதிரான இந்திய அணியில் இருந்தும் பயஸ் நீக்கப்பட்டு இருந்தார். 

ஐந்து பேர் கொண்ட இந்திய அணிக்கு, முன்னாள் டேவிஸ் கோப்பை கேப்டன் எஸ்.பி. மிஸ்ரா தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இரட்டையர் பிரிவில், லியாண்டர் பயஸ்- ரோஹன் போபண்ணாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடுகிறார். 

ஒரு வெற்றி பெறும் பட்சத்தில், இரட்டையர் பிரிவில் 43 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை பயஸ் படைக்க இருக்கிறார்.

இரட்டையரில் பயஸுடன் ஜோடி சேர போபண்ணா விரும்பவில்லை என்றும், அவர் போட்டியில் ரிசர்வ் வீரராக இருக்கவே விரும்புகிறார் எனவும்,  நான்-பிளேயிங் கேப்டன் மகேஷ் பூபதி தேர்வுக்குழு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இருந்தபோதும் தேர்வுக்குழு பயஸ்- போபண்ணாவை இணைத்துள்ளது.

அணியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான யுகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன், சுமித் நகல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். டிவிஜ் சரணும் (ரிசர்வ்) அணியில் இடம் பிடித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP