டேவிஸ் கோப்பை: இந்தியாவை 3-1 என வீழ்த்தியது இத்தாலி!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், இந்தியா - இத்தாலி அணிகள் மோதிய சர்வதேச தகுதிச் சுற்று போட்டியில், 2-0 என முன்னிலை பெற்றிருந்த இத்தாலி அணி, 3-1 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
 | 

டேவிஸ் கோப்பை சர்வதேச தகுதிச்சுற்று போட்டிகளில் இந்தியா இத்தாலி அணிகள் மோதிய போட்டி, வரும் தொடர் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில், இந்திய அணி தோல்வியடைந்தது. இத்தாலியின் அண்டிரேயாஸ் செப்பி, இந்திய அணியின் ராம்குமார் ராமநாதனையும், இத்தாலியின் மாட்டியோ பெர்ரட்டினி இந்தியாவின் பிரஜ்னேஷ் கண்ணேஸ்வரனையும்  நேர் செட்களில் வீழ்த்தி 2-0 என இத்தாலி முன்னிலை பெற்றது. 

இந்நிலையில், இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டையர் போட்டியில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - டிவிஜ்  சரண் ஜோடி, இத்தாலியின் செப்பி, சிமோன் ஜோடியை 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், வெற்றி பெற்றால், சமன் செய்து இத்தாலிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற நிலையில், களமிறங்கிய கண்ணேஸ்வரனை,இத்தாலியின் செப்பி 6-1 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3-1 என இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

டேவிஸ் கோப்பை உலக இறுதி சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தியா ஜோனல் சுற்றுக்கு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP