சின்சினாட்டி ஓபன்: பெடரர், ஜோகோவிச் வெற்றி; முர்ரே தோல்வி

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் துவக்க போட்டியில் இருந்து இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே வெளியேற்றப்பட்டார்.
 | 

சின்சினாட்டி ஓபன்: பெடரர், ஜோகோவிச் வெற்றி; முர்ரே தோல்வி

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் துவக்க போட்டியில் இருந்து இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே வெளியேற்றப்பட்டார். 

அமெரிக்காவின் ஓஹியோவில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு துவக்க போட்டியில், முன்னாள் நம்பர் ஒன் வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பிரான்சின் லூகாஸ் பௌல்லேவுடன் மோதினார். 

இடுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு மீண்டும் களம் கண்டுள்ள முர்ரே, போட்டியில் வெற்றி பெற போராடினார். ஆனால், பௌல்லே 6-1, 1-6, 6-4 என்ற கணக்கில் முர்ரேவை வென்றார். 

மற்ற துவக்க ஆட்டங்களில், நோவக் ஜோகோவிச், ஸ்டான் வாவ்ரிங்கா, நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். 

ஆடவருக்கான இரண்டாவது சுற்று போட்டியில், நம்பர் 2 வீரர் ரோஜர்ஸ் பெடரர் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மனின் பீட்டர் கோஜுவ்ய்ஸ்க்கை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் பெடரர், அர்ஜென்டினாவின் லியோனார்டோ மேயரை எதிர்கொள்கிறார். 

ரோஜர்ஸ் கோப்பையை கைப்பற்றிய நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால், யுஎஸ் ஓபன் போட்டிக்காக, சின்சினாட்டி ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP