கனடா ஓபன்: அரையிறுதியில் நடால், ஹாலேப்

கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் அரையிறுதி போட்டிக்கு நம்பர் ஒன்னான சிமோனா ஹாலேப் மற்றும் ரஃபேல் நடால் முன்னேறினர்.
 | 

கனடா ஓபன்: அரையிறுதியில் நடால், ஹாலேப்

கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் அரையிறுதி போட்டிக்கு நம்பர் ஒன்னான சிமோனா ஹாலேப் மற்றும் ரஃபேல் நடால் முன்னேறினர். 

கனடாவின் மாண்ட்ரீலில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியின் மகளிர் பிரிவு காலிறுதியில், நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் சிமோனா ஹாலேப் 7-5, 6-1 என்ற கணக்கில் பிரான்சின் கரோலினா கார்சியாவை வீழ்த்தினார். 

இன்று நடக்க இருக்கும் அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அஷ்லேயி பார்ட்டியுடன் மோதுகிறார் ஹாலேப். காலிறுதியில் பார்ட்டி, 6-3, 6-1 என்ற நேர்செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்ட்டன்ஸை தோற்கடித்திருந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2-6, 6-4, 6-4 என்ற கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிக்கை வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் அரையிறுதியில் நடால், ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்கொள்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP