ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஷரன்

ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஷரன்
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஷரன்

ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர்களான ரோஹன் போபண்ணா, டிவிஜ் ஷரன் முன்னேறியுள்ளனர். 

இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா- பிரான்சின் ரோஜர் வஸ்ஸலின் இணை, 6-2, 7-6 (7-3) என்ற கணக்கில் போர்ச்சுகலின் ஜோயா சௌசா- அர்ஜென்டினாவின் லியோனார்டோ மேயர் ஜோடியை 16 நிமிடத்தில் வீழ்த்தியது. 

இதே போல் மற்றொரு போட்டியில் இந்திய வீரர் டிவிஜ் ஷரன்- அமெரிக்காவின் ராஜீவ் ராம் கூட்டணி, இத்தாலியின் போக்னினி- ஸ்பெயினின் கிரானோலர்ஸ் இணையை எதிர்கொண்டது. 2 மணி நேரம் 8 நிமிடம் நடந்த இப்போட்டியில், ஷரன் அணி 4-6, 7-6 (7-4), 6-2 வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP