ஆஸ்திரேலியா ஓபன்: ரோஜர் பெடரர், சிமோனா ஹாலெப் வெற்றி

ஆஸ்திரேலியா ஓபன்: ரோஜர் பெடரர், சிமோனா ஹாலெப் வெற்றி
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: ரோஜர் பெடரர், சிமோனா ஹாலெப் வெற்றி


2018 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இப்போட்டியில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 2ம் நிலை வீரர் ரோஜர் பெடரர், 3-வது சுற்று ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஐந்து முறை ஆஸ்திரேலியா சாம்பியனான பெடரர், 6-4 6-4 7-6 (7-4) என்ற கணக்கில் ஜெர்மனின் ஜான் லெனார்ட்டை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் பெடரர், பிரான்சின் கஸியூட்டை எதிர்கொள்ள உள்ளார். 18 முறை இவருடன் போட்டியிட்டதில், பெடரர் இரண்டு முறை மட்டுமே தோல்வியை பெற்றிருக்கிறார். 

மற்ற போட்டிகளில், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், ஜெர்மனின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ், இத்தாலியின் போக்னினி, அர்ஜென்டினாவின் டெல் பொற்றோ போன்ற முன்னணி வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனை ருமேனியாவின் சிமோன் ஹாலெப், 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் கனடாவின் பௌசர்ட்டை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில், முன்னணி வீராங்கனைகளான பார்போரா ஸ்ட்ரிக்கோவா, கரோலின் கார்சியா, ரட்வன்ஸ்கா, கரோலினா பிளிஸ்க்கோவா ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP