ஆஸ்திரேலியா ஓபன்: தகுதிச் சுற்றில் பாம்ப்ரி, ராம்குமார் வெற்றி

ஆஸ்திரேலியா ஓபன்: தகுதிச் சுற்றில் பாம்ப்ரி, ராம்குமார் வெற்றி
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: தகுதிச் சுற்றில் பாம்ப்ரி, ராம்குமார் வெற்றி


2018 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன், வரும் 15ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டிக்கான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் டாப் வீரர்களான யுகி பாம்ப்ரி மற்றும் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், சுமித் நகல் மற்றும் ப்ரஜனீஷ் குன்னேஸ்வரன், தகுதிச் சுற்றுடன் வெளியேறினர். 

கனடாவின் ப்ராட்லி ஸ்சுனீரை 1-6, 6-3, 6-4 என்ற கணக்கில் 15ம் நிலை வீரர் பாம்ப்ரி வென்றார். இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் டபெர்னெரை, பாம்ப்ரி எதிர்கொள்ள உள்ளார். 28ம் இடம் வகிக்கும் ராம்குமார், 6-7(8), 7-6(3), 6-2 என அமெரிக்காவின் ப்ராட்லி கல்ஹனை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் பிரான்ஸின் க்ளெப் சஹாரோவுடன்- ராம்குமார் மோதுகிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP