ஆஸ்திரேலியா ஓபன்: நோவக் ஜோகோவிச் வெற்றி

ஆஸ்திரேலியா ஓபன்: நோவக் ஜோகோவிச் வெற்றி
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: நோவக் ஜோகோவிச் வெற்றி


மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த இரண்டாம் சுற்றில், ஆறு முறை ஆஸ்திரேலிய சாம்பியனான முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். 

2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், பிரான்சின் கேல் மான்பில்ஸை 4-6, 6-3, 6-1, 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தி வெற்றி பெற்றார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஜோகோவிச், முதல் செட்டை தவறவிட்டாலும், மீதமிருந்த செட்களை கைப்பற்றி அசத்தினார். 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஜோகோவிச், அடுத்த சுற்றில் 21ம் நிலை வீரர் ஆல்பர்ட் ராமோஸ்-வினோலஸை எதிர்கொள்ள இருக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP