ஆஸ்திரேலியா ஓபன்: நிஷிகோரி விலகல்

ஆஸ்திரேலியா ஓபன்: நிஷிகோரி விலகல்
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: நிஷிகோரி விலகல்


2018 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வரும் 15ம் தேதி முதல் 28ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இருந்து ஜப்பானின் முன்னணி வீரர் கெய் நிஷிகோரி ஆகியோர் விலகியுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வராததால் போட்டியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும் நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் போட்டியில் இருந்து எந்த ஒரு ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் ஜோகோவிச், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நடைபெறும் கண்காட்சி ஆட்டங்களில் பங்கேற்பார். அதன் பிறகு தான், ஆஸி. ஓபன் போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயம் காரணமாக டென்னிஸ் களத்தை விட்டு விலகி இருந்த, ஸ்டான் வாவ்ரிங்கா, மிலோஸ் ரோனிக் ஆகியோர் ஆஸ்திரேலியா ஓபன் போட்டிக்காக களம் திரும்ப உள்ளனர். பிரெஞ்சு, யுஎஸ் ஓபன் பட்டங்களை கைப்பற்றிய ரோஜர் பெடரர், கடந்த வாரம் நடந்த பிரிஸ்பேன் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியிருந்தார். தற்போது அவர் முழு உடற்தகுதி பெற்று விட்டதால், ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் களமிறங்க இருக்கிறார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP