ஆஸ்திரேலியா ஓபன்: 3ம் சுற்றுக்கு நடால், வோஸ்னியாக்கி முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன்: 3ம் சுற்றுக்கு நடால், வோஸ்னியாக்கி முன்னேற்றம்
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: 3ம் சுற்றுக்கு நடால், வோஸ்னியாக்கி முன்னேற்றம்


ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு நடால், வோஸ்னியாக்கி முன்னேறியுள்ளனர். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால், 52-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவின் ரோட் லவரை எதிர்கொண்டார். இரண்டு மணி நேரம் 38 நிமிடங்கள் நடந்த  இப்போட்டியில் நடால் 6-3, 6-4, 7-6 (7/4) என்ற கணக்கில் லவரை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். அந்த சுற்றில் நடால், போஸ்னியனின் தாமிருடன் மோத உள்ளார். 

மற்ற போட்டிகளில், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், குரோவேஷியாவின் மாரின் சிலிக், இத்தாலியின் அண்ட்ரெஸ் செப்பி, பிரான்சின் ட்சோங்கா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், டேனிஷ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 3-6, 6-2, 7-5 என்ற கணக்கில் குரோவேஷியாவின் ஜனா பெட்டை தோற்கடித்து, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். இதுவரை 43 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றுள்ள வோஸ்னியாக்கி, இந்த ஆண்டு தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். மூன்றாவது ரவுண்டில் டச் வீராங்கனை கிகி பெர்டென்ஸை, வோஸ்னியாக்கி எதிர்கொள்ள இருக்கிறார்.

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 10ம் நிலை வீராங்கனை கோகோ வான்டேவெக்ஹ், 13ம் நிலை வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் போன்ற முன்னணி வீராங்கனைகள் போட்டியின் துவக்கத்திலேயே தோல்வியடைந்து வெளியேறினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP