ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பயஸ்- ராஜா

ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பயஸ்- ராஜா
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பயஸ்- ராஜா


மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ்- புராவ் ராஜா இணை முன்னேறியது. 

இன்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் பயஸ்- ராஜா ஜோடி, 7-6(3), 5-7, 7-6(6) என்ற கணக்கில் 5ம் நிலை கூட்டணியான பிரேசிலின் புருனோ சோர்ஸ்- பிரிட்டனின் ஜேமி முர்ரேவை வீழ்த்தியது. இதன் மூலம், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்த  இந்தியா அணி, அந்த சுற்றில் 11ம் நிலை இணையான கொலம்பியாவின் செபாஸ்டியன் காபல்- ராபர்ட் பாரஹை எதிர்கொள்ள உள்ளது. 

பயஸ்- ராஜா ஜோடி பங்கேற்கும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுவாகும். கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் போட்டியில் விளையாடிய இவர்கள், இரண்டாவது சுற்றில் தோல்வி கண்டிருந்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP