ஆஸ்திரேலியா ஓபன்: பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன்: பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்


ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். துவக்க போட்டியில் தரவரிசையில் 2ம் இடம் வகிக்கும் பெடரர் 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஸ்லோவாகியாவின் அஜஸ் பெத்தேனேவை வீழ்த்தி, 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

அடுத்த சுற்றுப் போட்டியில் பெடரர், 44ம் நிலை வீரர் ஜெர்மனின் ஜான்-லென்னார்ட் ஸ்ட்ராஃபை எதிர்கொள்கிறார். 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6-1, 6-2, 6-4  என்ற நேர்செட்களில் அமெரிக்காவின் டொனால்ட் யங்கை தோற்கடித்தார். 2-வது சுற்றில் ஜோகோவிச்,  பிரான்சின் கேல் மான்ஃபில்ஸுடன் மோதுகிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP