ஆஸ்திரேலியா ஓபன்: கிர்ஜியோஸ் உள்பட 6 பேருக்கு ஒழுங்குமீறல் நடவடிக்கை

ஆஸ்திரேலியா ஓபன்: கிர்ஜியோஸ் உள்பட 6 பேருக்கு ஒழுங்குமீறல் நடவடிக்கை
 | 

ஆஸ்திரேலியா ஓபன்: கிர்ஜியோஸ் உள்பட 6 பேருக்கு ஒழுங்குமீறல் நடவடிக்கை


மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் போது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நடந்த துவக்க போட்டியில் கிர்ஜியோஸ் 6-1, 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் பிரேசில் வீரர் ரோகேரியோ தாத்ரா சில்வாவை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின், கிர்ஜியோஸ் விதிமீறி நடந்து கொண்டதால், அவர் மீது ஒழுங்குமீறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவருக்கு 3000 டாலர் (ரூ.1,95,000) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

கிர்ஜியோஸ் உள்பட 6 பேருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் 15,000 டாலர் (ரூ.9,75,000) வசூலிக்கப்பட்டு இருக்கிறது. 

குரோவேஷியாவின் போர்னா கோரிக், டென்னிஸ் பேட்டை துஷ்பிரயோகம் செய்ததற்காக அவவருக்கு 5000 டாலர் (ரூ.3,25,000) அபராதம் விதிக்கப்பட்டது. இவரை போலவே பேட்டை துஷ்பிரயோகம் செய்ததற்காக அர்ஜென்டினாவின் டியாகோ, ரோமானியாவின் மாரிஸ் ஆகியோருக்கு 2000 டாலர் (ரூ.70,000) அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. 

அனைவர்க்கும் கேட்கும்படி ஆபாசமாக பேசியதற்காக கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் மற்றும் அமெரிக்காவின் ஸ்டீபனுக்கு தலா 1000 டாலர் (ரூ.65,000) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP