ஆஸி. ஓபன்: ஆட்டத்தின் பாதிலேயே விலகினார் ரஃபேல் நடால்

ஆஸி. ஓபன்: ஆட்டத்தின் பாதிலேயே விலகினார் ரஃபேல் நடால்
 | 

ஆஸி. ஓபன்: ஆட்டத்தின் பாதிலேயே விலகினார் ரஃபேல் நடால்


ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் பாதியில் நம்பர் ஒன் வீரர் ஸ்பானின் ரஃபேல் நடால் விலகினார். 

இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 4ம் நிலை வீரர் குரோவேஷியாவின் மரின் சிலிக்குடன், நடால் மோதினார். இதில், முதல் சேட்டை 6-3 என கைப்பற்றிய நடால், 2-வது செட் ஆட்டத்தை 3-6 என தவறவிட்டார். மூன்றாவது செட்டை மிகவும் ஆக்ரோஷமாக எதிர்கொண்ட நடால், 7-6 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து 4-வது செட்டை விளையாட ஆரம்பித்த நடாலுக்கு காலில் காயம் ஏற்பட்டது. 

வலது காலில் தசை பிடித்த நிலையில், வலியில் துடித்த அவருக்கு உடற்பயிற்சியாளர் மருந்து வழங்கி உதவி அளித்தார். இருந்த போதிலும் நடால், ஆட்டத்தை தொடர்ந்தார். அந்த செட்டை சிலிக் 6-2 என கைப்பற்றினார். தொடந்து 5-வது செட்டில், சிலிக் 2 புள்ளிகள் லீடிங்கில் இருந்த சமயம், நடால் ரிடையர் ஆவதாக அறிவித்தார். இதனால், அரையிறுதிச் சுற்றுக்கு சிலிக் தகுதி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.  

அரையிறுதியில் சிலிக், இங்கிலாந்து வீரர் கயில் எட்மண்ட்டுடன் மோதுகிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP