ஆஸி. ஓபன்: தோல்வியால் டென்னிஸ் ராக்கெட்டை அடித்து உடைத்த வீரர்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் 16ம் நிலை வீரரான மிலோஸ் ரயோனிக்கிடம் தோல்வியடைந்த விரக்தியில் 4ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரேவ் தனது டென்னிஸ் ராக்கெட்டை உடைத்தார்.
 | 

மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 4வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 4ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரேவ், கனடாவைச் சேர்ந்த 16ம் நிலை வீரரான மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார்.

இதில் ரயோனிக் ஸ்வேரேவிற்கு அதிர்ச்சி அளித்தார். கண்மூடி திறப்பதற்குள் முதல் இரண்டு செட்டுகளையும் ரயோனிக் 6-1, 6-1 எனக் கைப்பற்றினார். இதில் இருந்து ஸ்வேரேவால் மீள முடியவில்லை. இதனால் மிகவும் அப்செட் ஆனார். 3-வது செட்டில் கடுமையான போராடினார். இருந்தாலும் 6(5) - 7(7) தோல்வியடைந்து வெளியேறினார்.

நேர்செட் கணக்கில் தோல்வியடைந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் தனது ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP