ஏடிபி தரவரிசை: நடாலின் முதலிடத்தை நெருங்கும் பெடரர்

ஏடிபி தரவரிசை: நடாலின் முதலிடத்தை நெருங்கும் பெடரர்
 | 

ஏடிபி தரவரிசை: நடாலின் முதலிடத்தை நெருங்கும் பெடரர்


ஆஸ்திரேலியான் ஓபன் பட்டம் வாங்கியதன் மூலம், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையை ரோஜர் பெடரர் பெற்றுள்ளார். இந்த போட்டிக்கு பிறகு, தரவரிசை புள்ளியிலும் அவர் முன்னேறி இருக்கிறார். 

இன்று வெளியான புதிய ஏடிபி தரவரிசையிலும், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 2ம் இடத்தில் நீடிக்கிறார். இருப்பினும் புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் காலிறுதியுடன் வெளியேறிய நம்பர் ஒன் வீரர் நடால், தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இவரது முதலிடத்தை பிடிக்க பெடரருக்கு இன்னும் 155 புள்ளிகள் தேவையாக உள்ளது. 

ஆஸ்திரேலியாவின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் பெடரருடன் மோதிய மரின் சிலிக், மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை பெற்றுள்ளார். அரையிறுதி வரை முன்னேறி இருந்த ஹ்யேன் சுங் 29 இடங்கள் ஏறி 29-வது இடத்தை பிடித்தார். 

ஏடிபி தரவரிசை:-

1. ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 9,760 புள்ளிகள்

2. ரோஜர் பெடரர் (ஸ்விட்சர்லாந்து) 9,605

3. மரின் சிலிக் (குரோவேஷியா) 4,960 

4. க்ரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 4,630 (-1)

5. அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி) 4,610 (-1)

6. டொமினிக் தியம் (ஆஸ்திரியா) 4,060 (-1)

7. டேவிட் கோபின் (பெல்ஜியம்) 3,460

8. ஜாக் சாக் (அமெரிக்கா) 2,880 (+1)

9. ஜுவான் மார்ட்டின் டெல் (அர்ஜென்டினா) 2,815 (+1)

10. பாப்லோ சர்ரேனோ பஸ்டா (ஸ்பெயின்) 2,705 (+1)

11. கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) 2,620 (+1)

12. சாம் யூரரேய் (அமெரிக்கா) 2,490 (+1)

13. நோவக் ஜோகோவிச் (செர்பியா) 2,470 (+1)

14. நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரியா) 2,395 (+3)

15. ஸ்டான் வாவ்ரிங்கா (சவ்டிசர்லாந்து) 2,385 (-7)

16. தாமஸ் பெர்டய்ச (செக் குடியரசு) 2,320 (+4)

17. லூகாஸ் பெய்ல்லே (பிரான்ஸ்) 2,235 (+1)

18. ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 2,230 (-2)

19. ஜோ-விலபைரேட் ட்சோங்கா (பிரான்ஸ்) 2,050 (-4)

20. ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 1,960 (-1)

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP