ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியனானார் 21 வயதேயான ஸ்வெரெவ்!

லண்டனில் நடைபெற்ற ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில், உலக நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
 | 

ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியனானார் 21 வயதேயான ஸ்வெரெவ்!

லண்டனில் நடைபெற்ற ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில், உலக நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை, இளம் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கிராண்ட்ஸ்லாம் தொடருக்குப் பிறகு, டென்னிஸ் விளையாட்டில் மிகப்பெரிய தொடரான ஏடிபி பைனல்ஸின் இறுதிப்போட்டியில், 21 வயதான இளம் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், உலக நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சுடன் லண்டனில் மோதினார். அரையிறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை, ஸ்வெரெவ் போராடி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த 9 ஆண்டுகளில், ஏடிபி பைனல்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் மிக இளம் வீரர் என்ற பெருமையை ஸ்வெரெவ் பெற்றிருந்தார்.

இந்நிலையில், உலக நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சுடன் ஸ்வெரெவ் மோதும் போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முழு ஆதிக்கம் செலுத்தி, ஜோகோவிச்சை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அவர் வீழ்த்தினார். போட்டிக்கு பின் பேசிய ஸ்வெரெவ், "என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. என் வாழ்வில் நான் வெல்லும் மிகப்பெரிய பட்டம் இதுவாகும்" என்றார். அதன்பின் பேசிய ஜோகோவிச் "மிகவும் சிறப்பாக விளையாடினாய். வயதில் மிகவும் இளையவன் என்பதால், உனக்கு மிகப்பெரிய  எதிர்காலம் காத்திருக்கிறது" என்று கூறி வாழ்த்தினார். இந்த வெற்றிக்குப் பின்னர் உலக தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ஸ்வெரெவ்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP