தெ.ஆ-க்கு எதிரான டி-20 போட்டி: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 | 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கனமழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது. 150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்தது.

 அதிகபட்சமாக விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அதேபோன்று ஷிகர் தவான் 31 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP