ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 | 

ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏழாவது ஆட்டம், இங்கிலாந்தின் கார்டிஃப்பில் உள்ள சோஃபியா கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆப்கன் அணி பந்துவீச  தீர்மானித்தது.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் வீரர்கள், முதல் 18 ஓவர்களில் பட்டையை கிளப்பினர். 6 ரன் ரேட் என்ற விகிதத்தில் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால், 19 ஓவரிலிருந்து அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கின.

33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்து, இலங்கை அணி திணறிய கொண்டிருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், சுமார்  இரண்டரை மணி நேரம் ஆட்டம் தடைப்பட்டது.

மழை விட்ட பிறகு, ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இருப்பினும், இலங்கை அணி கூடுதலாக 19 ரன்களை சேர்த்த நிலையில்,  அதாவது 36.5 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி அணி 44 ரன்களுக்குள் முகமது ஷாசத், ரமத் ஷா , ஹஸ்மத்துல்லா ஷகிடி  ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.

இதன் பிறகு இலங்கை பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களால் மீள முடியவில்லை. 32.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP