தன்னலமில்லா தலைவர் எங்க ‛தல’ தோனி! 

அனைவரிடமும் சகஜமாக பேசும் தன்மை உடைய தோனி, எல்லாரையும் ஜாலியாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பார். அதற்காக பலவற்றையும் செய்வார். பிறரை சந்தோஷப்படுத்துவதன் மூலம், நாமும் சந்தோஷமாக இருக்க முடியும் என அடிக்கடி கூறுவார்.
 | 

தன்னலமில்லா தலைவர் எங்க ‛தல’ தோனி! 

தொழில் அதிபரும், கிரிக்கெட் ரசிகருமான வி.இராமசுந்தரம் எழுதும் தொடர்...

ஏதோ பேசினோம்; ஒப்புக்கு பொழுதை ஓட்டினோம் என்று தோனி ஒருபோதும் இருந்ததில்லை. உள்ளத்தில் இருந்து பேசுவார். பிடிக்கவில்லை என்றால் நகர்ந்து விடுவார். அது தான் தோனி.

என் குடும்பம், குழந்தைகளை பற்றிக் கேட்கும் போது, ஒரு முறை ஒரு தகவலைச் சொல்லி, மறுமுறை தெரியாமல் வேறொன்றை சொல்லி விட்டால், அன்று நீங்கள் அப்படி சொன்னீர்களே என்று கேள்வி கேட்பார். அந்த அளவுக்கு அவர் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் மிக கவனத்துடன் இருப்பார். 

தென்னிந்திய உணவு வகைகள் மேல் தோனிக்கு கொள்ளை பிரியம். அதிலும், மசால் தோசை என்றால், உயிர். சென்னை வரும் போதெல்லாம், தினமும் காலையில் மசால் தோசை கட்டாயம் சாப்பிடுவார். ஹோட்டலுக்கு வரும் போதும், போகும் போதும் நெஞ்சை நிமிர்த்தி எல்லோரையும் பார்த்துக் கொண்டு தான் போவார். 

தன்னலமில்லா தலைவர் எங்க ‛தல’ தோனி! 

சிலர் தலை குனிந்த படி தான் செல்வார்கள். எல்லோருக்கும் வணக்கம் வைக்க வேண்டும் என்பதால், அதை தவிர்க்கவே அப்படி செய்வார்கள். ஆனால், தோனி அப்படி அல்ல. கண்ணில் யார் பட்டாலும் அவர்களுக்கு வணக்கம் வைப்பார். வணக்கம் வைப்பவர்களுக்கு பதில் வணக்கம் வைப்பார். அது தான் அவருடைய ஆளுமை. 

சக வீரர்களுக்கு எதையும் சொல்லி புரியவைப்பதை விட, தானே முன்னின்று செய்து காட்டி அவர்களுக்கு விளங்க வைப்பார். போட்டிக்கு பிறர் கிளம்பும் முன், இவர் தயாராகி நிற்பார். நேரம் தவறாமை, அனைத்திலும் ஒரு நேர்த்தி, கவனம் சிதறாமை போன்ற நல்ல பண்புகளே அவரை, கேப்டன் பதவிக்கு உயர்த்தியது. 

அனைவரிடமும் சகஜமாக பேசும் தன்மை உடைய தோனி, எல்லாரையும் ஜாலியாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பார். அதற்காக பலவற்றையும் செய்வார். பிறரை சந்தோஷப்படுத்துவதன் மூலம், நாமும் சந்தோஷமாக இருக்க முடியும் என அடிக்கடி கூறுவார். 

2005ம் ஆண்டு என நினைக்கிறேன். ஓட்டல் அறையில் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, ஏதோ ஒரு சினிமாவில் வரும் காதல் காட்சிகள் குறித்து நான் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென மவுனமான அவர், தன் திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், எதிர்பாராத விபத்தில் அவர் இறந்து விட்டதாகவும் கூறினார். 

அதைக் கூறிய அவர் கண்களில் லேசாக கண்ணீர் முட்டி நின்றது. அவரை கண்டதும் நானும் கண் கலங்கினேன். சில நிமிட மவுனத்திற்குப் பின், மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் தோனியின் வாழ்க்கையிலும், இப்படிப்பட்ட சாேகம் மறைந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. 

அவரின் அந்த மவுனம், அந்த பெண்ணை எவ்வளவு உருகி உருகி காதலித்திருப்பார் என்பதை உணர்த்தியது. ஆனாலும், தன் சாேகத்தை மறந்து(மறைத்து) சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு திரும்பினார். அதுவும் அவரது சிறப்புகளில் ஒன்றாகவே பார்க்கிறேன். 

உணர்ச்சி வசப்படும்படியான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதிலிருந்து வெகு விரைவில் மீள்பவரால் தான், ஓர் அணியை திறம்பட வழி நடத்த முடியும். அந்த வகையில், கேப்டனுக்கே உரிய தலைமை பண்பும், உணர்ச்சிவசப்படாமல், எதார்த்தத்தை புரிந்து கொள்ளும் குணமும் அவரிடம் இருப்பதை உணர முடிந்தது. 

தொடரும்...


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP