சிஎஸ்கே மீண்டு வந்த கதை: முதல் முறையாக மனம் திறந்த தோனி

கடந்த 2013இல், மேட்ச் ஃபிக்சிங் விவகார்த்தில் சிக்கி, 2 ஆண்டுகள் தடைக்காலம் அனுபவித்த, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, அதிலிருந்து மீண்டும் வந்து, மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து, முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
 | 

சிஎஸ்கே மீண்டு வந்த கதை: முதல் முறையாக மனம் திறந்த தோனி

கடந்த 2013இல், மேட்ச் ஃபிக்சிங் விவகார்த்தில் சிக்கி, 2 ஆண்டுகள் தடைக்காலம் அனுபவித்த, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, அதிலிருந்து மீண்டும் வந்து, மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து, முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னையின் பல அடையாளங்களை போல, முக்கியமான அடையாளமாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி, சென்னைக்காரரோ என்று யோசிக்கும் அளவுக்கு, சொல்லால் அடக்க முடியாத அன்பை, அவர் மீது சென்னைவாசிகள் பொழிகின்றனர். ஐபிஎல் என்றால் மொத்த அணியும் சென்னை அணியை எதிர்த்து விளையாடுவது தான், சென்னையை வீழ்த்தினால் போதும் கப் கிடைக்கும் என்ற  அளவுக்கு, ஐபிஎல்லின் ராஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

ஆனால், இந்த அணியின் பக்கமாக இருப்பது, 2013ம் ஆண்டு நடந்த மேட்ச் ஃபிக்சிங் விவகாரம். இது குறித்து, ஹாட்ஸ்டார் ஸ்பெஷலில் தோனி முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார். 

சிஎஸ்கே மீண்டு வந்த கதை: முதல் முறையாக மனம் திறந்த தோனி

இன்று வெளியாகி இருக்கும் அந்த ஆவணப்படத்தில், தோனி பேசும் போது, "என்னை பொறுத்தவரைக்கும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், 2013 தான் மிகவும் இருட்டான காலமாக இருந்தது. இதற்கு முன்,  2007ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடைந்த போது, மன அழுத்தத்தை சந்தித்தேன்.

ஆனால் 2013 முற்றிலும் வித்தியாசமானது. 2007ம் ஆண்டு நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் 2013ல் அனைத்தும் வேறாக இருந்தது. நான் ஸ்பாட் ஃபிக்சிங் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் பற்றி பேசுகிறேன். அப்போது இந்தியாவில் அனைவரும் அதைப்பற்றி தான் பேசினர். அப்போது என் பெயரும் பாழானது. என்னையும் இந்த பிரச்னையில் இழுத்தார்கள். நானும் இதில் ஈடுபட்டேன் என்றார்கள். 

ஸ்பாட் ஃபிக்சிங் யாரு வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆனால் மேட்ச் ஃபிக்சிங்கில் பெரும்பாலான வீரர்கள் பங்கேற்க வேண்டும். 

சிஎஸ்கே மீண்டு வந்த கதை: முதல் முறையாக மனம் திறந்த தோனி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் போது, எங்களின் முழு திறமையையும் காட்ட வேண்டும். அந்த போட்டியில் நாங்கள் டாஸ் வென்று முதலில் பவுளிங் செய்தோம். அன்று நாங்கள் பவுளிங்கும் சரியாக செய்யவில்லை, பேட்டிங்கிலும் நாங்கள் ஜொலிக்கவில்லை. அதனால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இந்த பிரச்னை பற்றி நான் யாரிடமும் பேச விரும்பவில்லை. அதே நேரத்தில், எனக்கு மிகவும் உருத்தலாக இருந்தது. என்னை பொறுத்தவரை கிரிக்கெட் தான் மிகவும் முக்கியமானது. 

இப்போது வரை எனக்கு கிடைத்த அனைத்திற்கும் காரணம் கிரிக்கெட் தான். கொலையைவிட மேட்ச ஃபிக்சிங் மிக பெரிய குற்றம். ஏனெனில் அது என்னோடு மட்டும் முடிந்துவிடாது. ஒருவேளை இது போன்ற விஷயத்தில் நான் ஈடுபட்டிருந்தால், அதன் விளைவு மிகவும் பெரியதாக இருந்திருக்கும்.

இது போன்று, முன்பு நிறைய முறை நடந்திருக்கிறது. இதனால் மக்களுக்கு கிரிக்கெட்டின் மீது உள்ள ஆசையே போய்விடுகிறது. டேய், மேட்ச் ஃபிக்சிங் டா.. என நகர்ந்து விடுகிறார்கள். இதை விட  மிக கடினமான காலத்தை என் வாழ்க்கையில் சந்திக்க மாட்டேன் என நினைக்கிறேன். 

சென்னை அணிக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்ட போது, அணியினர் என்ன தவறு செய்தனர் என்று தான் யோசித்தேன். நாங்கள் என்ன தவறு செய்தோம்?. ஏன் இதனை அனுபவிக்க வேண்டும். 

அந்த இரண்டு வருடங்களில் எங்களது ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். நாங்கள் விளையாடாத போது எங்களை பற்றி சமூக வலைதளங்களில் நிறைய பேர் பேசினார்கள். நிறைய ரசிகர்கள் சிஎஸ்கே மீண்டும் வர வேண்டும் என்று கூறினார்கள்.

சென்னை ரசிகர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன். ஒருவர் சரியாக விளையாடாத போது அவர்களுக்கு எப்படி ஆதராவாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். 

சிஎஸ்கே மீண்டும் வந்தால், அந்த அணியின் வீரர்களை மீண்டும் எடுத்தால் யாரை முதலில் தேர்வு செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 

சிஎஸ்கே மீண்டு வந்த கதை: முதல் முறையாக மனம் திறந்த தோனி

பின்னர் நாங்கள் முழு அணியையும் மீண்டும் உருவாக்க வேண்டும். இதில் சுவாரஸ்மான விஷயம் என்னவென்றால், நாங்கள் ஏலத்தில் எடுத்த நான்கைந்து வீரர்கள், முதலில் தேர்வு செய்து வைத்திருந்த பட்டியலில் இல்லை. 

 

 

சென்னை அணிக்கு அப்பாக்களின் ஆர்மி என்று பெயர் வைத்தனர். அணியில் இருந்தவர்களில் அதிகமானோர், 30 வயதுக்கு அதிகமானோர் தான். முதலில் நானும் அதுபற்றி யோசிக்கவில்லை. சென்னைக்கு வந்த போது நாங்கள் குடும்பத்தோடு வந்தோம். இந்த வயதுடைய வீரர்களை வைத்து எப்படி வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. விளையாடும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்" என்றார். 

மேலும் இந்த வீடியேவில் சென்னை அணியின் முக்கிய நிர்வாகிகள், வீரர்களும் பேசுகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP