சவுரவ் கங்குலி.....!

அரும்பு மீசையும், குறும்பு பார்வையும் கொண்ட கங்குலி இயல்பாகவே வலது கை பழக்கம் உள்ளவர். ஆனால், இடது கை ஆட்டக்காரராக தன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.
 | 

சவுரவ் கங்குலி.....!

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும், அணியின் கேப்டனாக  இருந்து பல வெற்றிகளை வாரி குவித்து, "கொல்கத்தா இளவரசர்"  என செல்லமாக கிரிக்கெட் ரசிகர்களால் அன்பாக  அழைக்கப்படுபவர் நம் சவுரவ் கங்குலி. இவரது கிரிக்கெட் பயணம், 90-களில் தொடங்கியது.

அரும்பு மீசையும், குறும்பு பார்வையும் கொண்ட கங்குலி இயல்பாகவே வலது கை பழக்கம் உள்ளவர்.  ஆனால், இடது கை ஆட்டக்காரராக தன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.  

இந்திய அணி என்றாலே இந்திய மண்ணில் வெற்றி பெறாத அணி என்ற வரலாற்றை மாற்றி உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் நாட்டிலேயே வென்று இந்திய அணியின் அயல் நாட்டு தோல்விக்கு முற்று புள்ளி வைத்தவர் என்ற பெருமை நம் கங்குலியையே சாரும். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தை உலக அரங்கில் மாற்றியவர் கங்குலி. இரண்டாயிரத்தில் கேப்டன் கங்குலியின் வெற்றி இன்னிங்ஸ் தொடங்கியது. தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து, பல தொடர் வெற்றிகளை கண்டு, சாதனை படைத்தவர். 

சவுரவ் கங்குலி.....!

தற்போது உலகிலேயே மிக பெரிய BCCI club-க்கு போட்டியின்றி அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நம் கங்குலி. BCCI-கிளப்பிற்கு இதுவரை பெரிய தொழிலதிபர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தான் தலைவராக இருந்து வந்தனர். தற்போது, சவ்ரவை தேர்வு செய்து இருப்பதால் பல சிறந்த நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நான், கங்குலியிடம் பல தருணங்களில், அணியின் வீ ராராக இருந்த போதும் சரி, கேப்டனாக இருந்த போதும் சரி, சந்தித்து  உரையாடியிருக்கிறேன். BCCI-யில் தலைவராக தேர்ந்தெடுத்த பொழுது தொலைபேசி மூலம் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது  என்னிடம் அவரின்  சில முக்கிய குறிக்கோள்களை  என்னுடன் பகிர்ந்து கொண்டார். 
             

- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் மற்றும்  ஒரு நாள் கிரிக்கெட் ஆட்ட வீரா்களின் நலன்களை, பாதுகாப்பையும் நன்றாக கவனித்துக் கொள்ளவது. 

- BCCI போர்டில் உள்ள குறைகளை  நிவர்த்தி  செய்து சரிப்படுத்தி  நன்றாக  நிர்வகிப்பது.

- இந்திய  அணியின் கேப்டனின் கரங்களை வலுப்படுத்தி அவருக்கு வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்வது .

 - ICC ல் இருந்து  BCCI-க்கு வரும் வருவாயை பெருக்குவது .
 

-  DOMESTIC  (உள்நாட்டு) கிரிக்கெட்டை வலுப்படுத்துவதன் மூலம் உலக அளவில் இந்திய அணியின் புகழ் அதிகரிக்கும்.                  

- ரஞ்சி கோப்பையை மேலும் சிறப்பாக மாற்றி அதன் மூலம் நல்ல வீரா்களை தேர்ந்தெடுத்து, நன்கு பயிற்சி பெற வைத்து, இந்திய அணி வெற்றிகளை குவிக்க  தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் .

சவுரவ் கங்குலி.....!

இந்தியாவின் BCCI  ஒரு பெரிய POWER HOUSE ஆகும் இதனை, அரசிலுக்கும் பணத்திற்கும்  ஈடுபடுத்தாமல் திறமையாக நிர்வாகம் செய்து BCCI - யை மேலும் வலுப்படுத்துவது தான் என் குறிக்கோள் என்றார். BCCI -யை ஒரு தலை சிறந்த “BOARD” ஆக மாற்றலாம் இதில் அரசியல் தலையிடாமல் இருந்தால். என்று கூறி முடித்தார் சவுரவ் .
 

சவுரவ் கங்குலி.....!

டாக்டர். வி.ராமசுந்தரம்

கிரிக்கெட் ஆலோசகர் 

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP