ராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் !

மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியில் தோனி இடம்பெறமாட்டார் என்றும், தற்போதைக்கு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வும் பெறமாட்டார் எனவும் தெரிகிறது.
 | 

ராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் !

வெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. இதில், அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி இடம்பெறுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. 

அத்துடன், கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து அவர் ஓய்வுபெற உள்ளதாக அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், தான் இரண்டு மாதங்களுக்கு துணை ராணுவக் குழுவுடன் இணைந்து சேவையாற்ற விரும்புவதாக தோனி தெரிவித்துள்ளதாக, இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறியுள்ளன. 

மேலும், தோனியின் இந்த முடிவு குறித்து  இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம், மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியில் தோனி இடம்பெறமாட்டார் என்றும், தற்போதைக்கு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வும் பெறமாட்டார் எனவும் தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP