அடித்து உடைக்கப்பட்ட டிவி... திட்டித் தீர்த்த ரசிகர்கள்...பாகிஸ்தானுக்கு வந்த வேதனை

இந்த முறையாவது இந்தியாவை வீழ்த்தி, உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியை இதுவரை வெற்றி கொண்டதே இல்லை என்ற நீண்டநாள் களங்கத்தை பாகிஸ்தான் அணி துடைக்கும் என்ற அந்த நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு வழக்கம்போல் இந்த முறையும் பொய்த்துப் போனது.
 | 

அடித்து உடைக்கப்பட்ட டிவி... திட்டித் தீர்த்த ரசிகர்கள்...பாகிஸ்தானுக்கு வந்த வேதனை

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை, இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இதனால், உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியை இதுவரை வெற்றி கொண்டதே இல்லை என்ற நீண்டநாள் களங்கத்தை பாகிஸ்தான் அணி இந்த முறையாவது துடைக்கும் என்ற அந்த நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு வழக்கம்போல் பொய்த்துப் போனது. 

இதன் விளைவாக, ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்துக்கே சென்று, தாங்கள் மேட்ச் பார்த்து கொண்டிருந்த டிவியை நடுத்தெருவில் போட்டு உடைத்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


"இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் விளையாடுவதற்கு முதல் நாள் இரவு, பாகிஸ்தான் வீரர்கள் லண்டனில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு சென்று பீட்சா, பர்க்கர் என தின்று தீர்த்துள்ளனர். இப்படி சாப்பிடுவதிலேயே அவர்கள் குறியாக இருந்தால் மேட்ச்சில் எப்படி ஜெயிக்க முடியும்?" என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.


அவரது இக்குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தான் அணியின் சோஹிப் மாலிக் உள்ளிட்ட வீரர்கள் சனிக்கிழமை நள்ளிரவு, லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் இருக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP