செமி ஃபைனல் : இந்திய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தென்னாப்பிரிக்கா!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளதன் மூலம், இத்தொடரில் அந்த அணி ஆறுதல் வெற்றி அடைந்துள்ளது.
 | 

செமி ஃபைனல் : இந்திய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தென்னாப்பிரிக்கா!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளதன் மூலம்,  அந்த அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது என்பதுடன், அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணியுடன் மோத வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம் நிறைவேற வழிவகை செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 

உலகக்கோப்பையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கும்,  ஆஸ்திரேலியா -தென்னாப்பிரிக்கா அணிகளுக்கும் இடையே என நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் ஆரம்பிக்கும் முன் பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 13 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருந்தன.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும்; அதேசமயம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோற்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

செமி ஃபைனல் : இந்திய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தென்னாப்பிரிக்கா!

ஏன் இந்த எதிர்பார்ப்பு என்கிறீர்களா?  புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி, பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் அணியுடனும், இரண்டாம் இடத்தில் இருக்கும் அணி, பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள அணியுடன் தான், செமி ஃபைனலில் மோத வேண்டும். தற்போது மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், நான்காம் இடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரு அணிகள் தற்போது இருக்கும் ஃபாமை ஒப்பிட்டு  பார்க்கும்போது. அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுவதைவிட, நியூசிலாந்துடன் மோதினால், இந்தியா  செஃபாக ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிடலாம். அதனால்தான் ரசிகர்கள் நேற்றைய போட்டிகளின் முடிவுகள் இவ்வாறு அமைய வேண்டுமென எதிர்பார்த்தனர்.

அவர்களின் எதிர்பார்த்தபடியே, நேற்றைய போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியும், ஆஸ்திரேலியாவுக்கு தோல்வியும் கிடைத்துள்ளது. இதன் பயனாக, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள இந்தியா, நாளை மறுநாள் (ஜூலை 9), அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதில், நியூசிலாந்தை அசால்ட்டாக ஜெயித்து, இந்தியா கெத்தாக ஃபைனலுக்கு போகும் என்பதே ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP