‛ஆஸ்திரேலியாவை அசால்டா நினைக்காதீங்க...’ இந்திய அணிக்கு சச்சின் அறிவுரை

தென் ஆப்பிரிக்க அணியுடனா வெற்றியால், அதீத நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள வேண்டாம் என, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
 | 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையால், தென் ஆப்பிரிக்க அணி, 227 ரன்களில் சுருண்டது. எளிய இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்திய அணி, வரும் 9ம் தேதி, ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சையில் இறங்கவுள்ளது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த முன்னாள் வீரர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நம் வீரர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கியுள்ளார். 

சச்சின் கூறுகையில், ’’தென் ஆப்பிரிக்க அணியுடனான வெற்றியை எண்ணி, அதே நம்பிக்கையில், ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டால் அது நல்லதல்ல. ஆஸ்திரேலியா மிகவும் வலுவான அணி. அந்த வீரர்கள் மிகவும் திறமைசாலிகள். தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில், நம் வீரர்கள் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி. 
ஆனாலும், ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிடக் கூடாது. முந்தைய போட்டியில் பெற்ற வெற்றியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய அணியாக, முதல் வெற்றியை நோக்கி ஆடக்கூடிய மனநிலையுடன் களம் இறங்க வேண்டும். அப்போது தான், ஆஸ்திரேலியாவை வெல்ல முடியும்’’ என அவர் அறிவுரை வழங்கியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP