உலகக்கோப்பையில் ரோகித் சாதனை: 4-வது சதம், சாதனை சமன், ரன்களில் முதலிடம், சச்சினுக்கு பிறகு 2-ஆவது வீரர்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 90 பந்தில் 5 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார்
 | 

உலகக்கோப்பையில் ரோகித் சாதனை: 4-வது சதம், சாதனை சமன், ரன்களில் முதலிடம், சச்சினுக்கு பிறகு 2-ஆவது வீரர்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 90 பந்தில் 5 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். மேலும், உலகக்கோப்பையில் 4-வது சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்து, 4 சதமடித்த முன்னாள் இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையையும் ரோகித் சமன் செய்துள்ளார்.

மேலும், நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். 516 ரன்கள் அடித்த ஆஸி., வீரர் வார்னரை பின்னுக்கு  தள்ளி முதலிடம் பிடித்தார். உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த 2-ஆவது வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றுள்ளார். 500 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 1996, 2003 உலகக்கோப்பை தொடரில் சச்சின் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP