அறுவை சிகிச்சைக்கு பிறகு ஹர்திக் பாண்டியா வெளியிட்ட பதிவு !

பிரபல இந்திய கிரிக்கெட் வீர்ரா ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் இருப்பதாக தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் .
 | 

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான  ஹர்திக் பாண்டியாவுக்கு  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20  தொடரின் போது   முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தற்காலிகமாக போட்டிகளில் இருந்து விலகி இருந்த  ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிக்சை நடந்துள்ளது.  

இந்நிலையில் தான் நலமாக இருப்பதாகவும் விரைவில் என்னை எதிர்பார்க்கலாம் என்றும்  கருத்திட்டு , மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய  பதிவை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. ஏற்கனவே இவருக்கு  ஆசிய கோப்பை 2018 இன் போது காயம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஐபிஎல் 2019 இல் ஹர்திக் பாண்டியா தன்னுடைய  அபாரமான திறனை வெளிப்படுத்தியிருந்தார். நட்சத்திர வீரராக இருக்கும் ஹர்திக் பாண்டியா அடுத்தாண்டு  டி 20 உலகக் கோப்பைக்கு முன்னர்  மீண்டும் வரவில்லை என்றால், அது இந்தியாவுக்கு பெரிய அடியாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP