இந்திய கிரிக்கெட் வீரர்களை திடீரென சந்தித்த ராகுல் டிராவிட்

பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை நேஷனல் கிரிக்கெட் அகாடமி தலைவரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் சந்தித்து பேசினார்.
 | 

இந்திய கிரிக்கெட் வீரர்களை திடீரென சந்தித்த ராகுல் டிராவிட்

பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை நேஷனல் கிரிக்கெட் அகாடமி தலைவரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் சந்தித்து பேசினார்.

இந்திய கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் விளையாடுவதற்காக நேற்று பெங்களூரு சென்றடைந்தது. இந்த நிலையில், சின்னசாமி மைதனாத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நேஷனல் கிரிக்கெட் அகாடமி தலைவரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் திடீரென்று விசிட் அடித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளார் ரவி சாஸ்திரி உள்ளிட்ட வீரர்களிடம் ராகுல் டிராவிட் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.

பிசிசிஐ இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இந்திய கிரிக்கெட் சிறந்தவர்கள் இருவர் சந்தித்தனர் என்று ரவிசாஸ்திரி, ராகுல் டிராவிட்டை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP