பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்!

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை ஜூலை 1ம் தேதி அவர் தலைவராக பொறுப்பேற்கிறார்.
 | 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் இயங்கி வரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை இந்த தலைவர் பொறுப்பை ஏற்கிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக ராகுல் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கான பயிற்சி அளிக்கும் பொறுப்பை தாற்காலிகமாக அதன் துணை பயிற்சியாளர்கள் கவனித்துக்கொள்வர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP