புஃட்பால் அசூரன்... யார் இந்த மான்செஸ்டர் யுனைட்டெட்?

அதிக வெற்றி... அதிக கோப்பை... யார் இந்த மான்செஸ்டர் யுனைட்டெட்?
 | 

புஃட்பால் அசூரன்... யார் இந்த மான்செஸ்டர் யுனைட்டெட்?

இந்திய பிரீமியர் லீக் ரசிகர்களுக்கு சி.எஸ்.கே எப்படியோ (ஃபுட் பால் ரசிகர்கள் இந்த ஒப்பீட்டுக்காக மன்னிக்கவும்...) அதேபோல், இங்கிலாந்தின் பிரிமியர் லீக் கால்பந்து ஆட்டத்துக்கு மான்செஸ்டர் யுனைடெட். சி.எஸ்.கே அணி எப்படி ஐ.பி.எல், சாம்பியன்ஸ் கோப்பையை எல்லாம் வென்றுள்ளதோ, அதேபோல் 20 லீக் டைட்டில், 12 எஃப்.ஏ கப், 5 லீக் கப், 21 எஃப்.ஏ கம்யூனிட்டி ஷீல்ட் வென்று மிகப்பெரிய அணியாக விளங்குகிறது.

கடந்த சீசனில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்து, சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்த அணியின் பலத்தைக் கண்டு மற்ற அணிகள் அதிர்ந்துதான் போயின... 

மான்செஸ்டர் யுனைடெட் அணி பற்றிய இன்னொரு விசேஷ சோக செய்தியும் உண்டு. 1958ம் ஆண்டு. பெல்கிரேடில் நடந்த ஐரோப்பிய கோப்பைத் தொடரில் பங்கேற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி, தாயகம் திரும்பியது. அப்போது, மியூனிச்சில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு கிளம்பிய விமானம் ரன்வேயில் இருந்து மேல் எழும்ப முயன்றது. ஆனால், விமானத்தால் டேக் ஆஃப் ஆக முடியவில்லை. விமானத்தை நிறுத்தவும் முடியவில்லை.

ரன்வேயில் வேகமாக ஓடிய விமானம், விமானநிலைய சுவற்றில் மோதி இரண்டு துண்டாக உடைந்து வெடித்தது. இதில், கால்பந்து வீரர்கள், பத்திரிகையாளர்கள், பைலட்கள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இதனால், பிப்ரவரி 2ம் தேதியை கருப்பு தினமாக உலகெங்கும் உள்ள யுனைட்டட் ரசிகர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP