டாட்டன்ஹேமுக்கு ஷாக் கொடுத்தது வாட்ஃபோர்டு! த்ரில் வெற்றி

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், பலம்வாய்ந்த டாட்டன்ஹேம் ஹாட்ஸ்பர்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வாட்ஃபோர்டு.
 | 

டாட்டன்ஹேமுக்கு ஷாக் கொடுத்தது வாட்ஃபோர்டு! த்ரில் வெற்றி

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், பலம்வாய்ந்த டாட்டன்ஹேம் ஹாட்ஸ்பர்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வாட்ஃபோர்டு.

3 போட்டிகளில் 3 வெற்றிகள் என அட்டகாசமான துவக்கத்தை பெற்ற டாட்டன்ஹேம் மற்றும் வாட்ஃபோர்டு அணிகள் நேற்று மோதின. ஆயிரக்கணக்கான வாட்ஃபோர்டு ரசிகர்கள் முன்னிலையில், டாட்டன்ஹேம் அணிக்கு இந்த போட்டி பலப்பரீட்சையாக அமைந்தது. 

எதிர்பார்த்தது போலவே டாட்டன்ஹேம் ஆதிக்கம் செலுத்தியது. அதிரடி வீரர் ஹேரி கேன், டெலி ஆலி, எரிக்சன், லூகாஸ் ஆகியோரின் தொடர் தாக்குதல்களில் வாட்ஃபோர்டு வீரர்கள் திணறினர். மறுமுனையில் வாட்ஃபோர்டு அணியும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால், முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியில், 53வது நிமிடத்தில், லூகாஸ் அடித்த ஷாட், வாட்ஃபோர்டு அணியின் டோகோரேவின் நெஞ்சில் பட்டு கோலுக்குள் சென்றது. தனது அணிக்கு எதிராகவே தவறுதலாக ஓன் கோல் அடித்தார் டோகோரே. ஆனால், டாட்டன்ஹேமின் முன்னிலை நீடிக்கவில்லை. விடா முயற்சி செய்த வாட்ஃபோர்டு வீரர்கள் அதற்கான பலனை 69வது நிமிடத்தில் பெற்றனர். ப்ரீ கிக் மூலம் கிடைத்த வாய்ப்பை, வாட்ஃபோர்டின் நட்சத்திர வீரர் டிராய் டீனி தலையால் முட்டி கோலாக்கினார். அடுத்த சில நிமிடங்களிலேயே, வாட்ஃபோர்டு அணிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில், கேத்ஹார்ட் கோல் அடித்தார். அதன்பின் டாட்டன்ஹேம் பல வாய்ப்புகளை உருவாக்கியும் கோல் அடிக்க முடியவில்லை. 2-1 என வெற்றி பெற்றது வாட்ஃபோர்டு.

4 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் யாருமே எதிர்பார்க்காத அசத்தலான துவக்கம் பெற்று 3வது இடத்தில் உள்ளது வாட்ஃபோர்டு. டாட்டன்ஹேம் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP