இன்றைய பிரீமியர் லீக் ப்ரீவியூ: செல்சி vs ஆர்சனல்!

லண்டனை சேர்ந்த செல்சி மற்றும் ஆர்சனல் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியின் மீது எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. இரு அணிகளின் புதிய பயிற்சியாளர்கள் பல புதிய யுக்திகளை கையில் எடுப்பார்கள் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
 | 

இன்றைய பிரீமியர் லீக் ப்ரீவியூ: செல்சி vs ஆர்சனல்!

பிரீமியர் லீக் தொடரில் இன்று செல்சி - ஆர்சனல் அணிகளுக்கு இடையேவும், டாட்டன்ஹேம் - ஃபுல்ஹேம்  அணிகளுக்கு இடையேவும் நடைபெறும் லண்டன் டெர்பி போட்டிகள் பற்றிய ஒரு ப்ரீவியூவை பார்க்கலாம்...

டாட்டன்ஹேம் vs ஃபுல்ஹேம் (7.30 PM)

இன்றைய பிரீமியர் லீக் ப்ரீவியூ: செல்சி vs ஆர்சனல்!

லண்டன் நகரை சேர்ந்த டாட்டன்ஹேம் மற்றும் ஃபுல்ஹேம் அணிகள் மோதுகின்றன. 4 வருடங்கள் இரண்டாம் தர லீக்கிற்கு தள்ளப்பட்டு, கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடி மீண்டும் பிரீமியர் லீக்கிற்கு வந்துள்ளது ஃபுல்ஹேம். பிரென்ச் வீரர் செரி, ஜெர்மன் வீரர் ஷுர்லே, மிட்ரோவிச் ஆகியோரை இந்த சீசனுக்காக வாங்கியுள்ள ஃபுல்ஹேம், அர்ஜென்டினா வீரர் வியெட்டோவை லோன் ஒப்பந்தப்படி பெற்றுள்ளது. இந்த ஆண்டு எப்படியாவது பிரீமியர் லீக்கை விட்டு வெளியேற்றப்படாமல் இருக்க வேண்டும் என்ற முடிவில் நிறைய செலவளித்துள்ளது இந்த அணி. புதிதாக எந்த வீரரையும் வாங்காத டாட்டன்ஹேம் அணிக்கு, முக்கிய வீரர் சன் ஹியுங் மின் இல்லாதது பெரிய இழப்பு. கொரிய தேசிய அணிக்காக அவர் விளையாட சென்றுள்ளார். 

இருந்தாலும், மிகப்பெரிய பிரீமியர் லீக் அணிகளையே மிரட்டும் அளவுக்கு பலம் கொண்ட டாட்டன்ஹேம் இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

செல்சி vs ஆர்சனல் (10.00 PM)

இன்றைய பிரீமியர் லீக் ப்ரீவியூ: செல்சி vs ஆர்சனல்!

லண்டன் நகரை சேர்ந்த மேலும் இரண்டு அணிகளான ஆர்சனல் மற்றும் செல்சி அணிகள், ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் மைதானத்தில் இன்று மோதுகின்றன. இரு அணிகளுமே, புதிய பயிற்சியாளரின் வருகையால், மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. 

முதல் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியிடம் 2-0 என வீழ்ந்தது ஆர்சனல். முன்பை விட ஆர்சனல் சிறப்பாக விளையாடியதாக பலர் கருதினாலும், சில தவறுகளால், போட்டியில் பெரிய ஆதிக்கத்தை ஆர்சனல் வீரர்களால் ஏற்படுத்த முடியவில்லை. எப்போதுமே ஆர்சனல் அணி அட்டாக் செய்தும், செல்சி அணி டிபெண்ட் செய்தும் விளையாடுவது வழக்கம். ஆனால், இந்தமுறை, அது நடக்க வாய்ப்பு மிக மிக குறைவு. ஆர்சனல் பயிற்சியாளர் உனாய் எமெரி, ஒவ்வொரு எதிரணிக்கும் ஏற்றவாறு தனது அணியை மாற்றியமைப்பதில் வல்லவர் என்பதால், செல்சியை சமாளிக்க, டிபென்ஸில் தனது கவனத்தை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, தனது பலமான டிபென்ஸை நம்பியிருக்கும் செல்சி, புதிய பயிற்சியாளர் மாரிசியோ சாரியின் கீழ், அட்டாக் செய்து விளையாடுவதை வழக்கமாக கொள்வதற்கு வாய்ப்பு அதிகம். முதல் போட்டியில் 3-0 என வெற்றி பெற்றதாலும், தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதனாலும், செல்சி முழுக்க அட்டாக் செய்து விளையாடலாம். வழக்கத்திற்கு மாறாக இந்த போட்டி இருக்கும் என்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP