மான்செஸ்டர் சிட்டியை டிரா செய்தது சூப்பர் வுல்வ்ஸ்!

பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டியை 1- 1 என டிரா செய்து அசத்தியது வுல்வர்ஹாம்டன்.
 | 

மான்செஸ்டர் சிட்டியை டிரா செய்தது சூப்பர் வுல்வ்ஸ்!

பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டியை 1- 1 என டிரா செய்து அசத்தியது வுல்வர்ஹாம்டன்.

நடப்பு சம்பியன்களான மான்செஸ்டர் சிட்டி, வுல்வர்ஹாம்டன் அணியுடன் பிரீமியர் தொடரின் 3வது போட்டியில் மோதியது. பலம்வாய்ந்த சிட்டி, போட்டி துவங்கியது முதல் தொடர்ந்து அட்டாக் செய்து விளையாடியது. ஆனால், அதற்கு அசராமல் வுல்வ்ஸ் அணியும் பதிலுக்கு அட்டாக் செய்தது. இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கின. முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

இரண்டாவது பாதியிலும் இதே நிலை தொடர்ந்தது. சிட்டி வீரர்கள் அடித்த பல ஷாட்களை, எதிரியணியின் கோல்கீப்பர் ரூயி பட்ரிசியோ தடுத்து பக்க பலமாக விளங்கினார். 57வது நிமிடத்தில் வுல்வ்ஸ் அணியின் போலி ஜொள் அடித்து முன்னிலை கொடுத்தார். ரீப்ளேயில் போலி ஆப்ஸைடாக இருந்தது த்வரிய வந்தது. ஆனால் நடுவர் கோலை வழங்கினார்.

69வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் டிபெண்டர் லப்போர்டே கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். கடைசி வரை சிட்டி பல முயற்சிகள் செய்தும் கோல் அடிக்க முடியவில்லை. 1-1 என போட்டி டிரா ஆனது. இரண்டு வெற்றிகளோடு முதல் இடத்தில் இருந்த சிட்டி, இந்த போட்டியில் டிரா செய்ததால் முதலிடத்தை இழந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP