ஸ்டர்ரிட்ஜ் அதிரடியில் தப்பியது லிவர்பூல்!

லிவர்பூல் செல்சி அணிகளுக்கு இடையே நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் அடித்த கடைசி நிமிட சூப்பர் கோலால், போட்டி 1-1 என டிரா ஆனது.
 | 

ஸ்டர்ரிட்ஜ் அதிரடியில் தப்பியது லிவர்பூல்!

லிவர்பூல் செல்சி அணிகளுக்கு இடையே நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் அடித்த கடைசி நிமிட சூப்பர் கோலால், போட்டி 1-1 என டிரா ஆனது. 

பிரீமியர் லீக் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த லிவர்பூல் அணி, 3வது இடத்தில் இருந்த செல்சி அணியுடன் மோதியது. லண்டனில் உள்ள ஸ்டாம்போர்டு பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, ஆரம்பம் முதல் அனல் பறந்தது. இரண்டு அணிகளும் கோல் அடிக்க விடாமுயற்சி செய்து பல வாய்ப்புகளை உருவாக்கினர். 25வது நிமிடத்தின் போது, செல்சி அணியின் ஈடேன் ஹசார்டு அசத்தலாக கோல் அடித்து, முன்னிலை கொடுத்தார். முதல் பாதியில் செல்சி 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. 

இரண்டாவது பாதியில் லிவர்பூல் தொடர்ந்து அட்டாக் செய்து பல வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், செல்சி அணியின் சிறப்பான டிபெண்டிங் மற்றும் கோல் கீப்பரால், லிவர்பூலின் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. செல்சி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த கடைசி நேரத்தில், 89வது நிமிடத்தின் போது, லிவர்பூலின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் சுமார் 30 அடி தூரத்தில் இருந்து அட்டகாசமான கோல் அடித்தார். 1-1 என போட்டி டிரா ஆனது. 

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றதால், தற்போது பிரீமியர் லீக் புள்ளி பட்டியலில் சிட்டி முதல் இடத்திலும், லிவர்பூல் இரண்டாவது இடத்திலும், செல்சி மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP