பிரீமியர் லீக்: முதல் வாரத்தில் நடந்தது என்ன? - ஓர் அலசல்

உலகிலேயே அதிக கால்பந்து ரசிகர்களால் பார்க்கப்படும் பிரீமியர் லீக் க்ளப் தொடர் கடந்த வெள்ளியன்று துவங்கியது. முதல் வாரத்தில் நடைபெற்ற போட்டிகளையும் அதன் முடிவுகளையும் பற்றிய ஒரு சின்ன அலசல்...
 | 

மான்செஸ்டர் யுனைட்டட் vs லெஸ்டர் சிட்டி

கடந்த சீசனை 81 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் முடித்தது மான்செஸ்டர் யுனைட்டட். வேறு ஏதாவது சீசனாக இருந்தால், இத்தனை புள்ளிகளுக்கு சாம்பியன் பட்டமே வென்றிருக்கலாம். ஆனால், யுனைட்டட் அணியின் கெட்ட நேரம், மான்செஸ்டர் சிட்டி 100 புள்ளிகள் பெற்ற சாதனையுடன் கோப்பையை கைப்பற்றியது. சிட்டி போல அட்டாக் செய்து விளையாட வேண்டும் என்ற யுனைட்டட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு, நட்சத்திர வீரர் பால் போஃபாவுடனான சர்ச்சை, இரண்டு ஆண்டுகளில் பெரிய கோப்பை எதையுமே வெல்லவில்லை என்ற விமர்சனங்களுக்கு நடுவே லெஸ்டர் சிட்டியுடன் மோதியது யுனைட்டட். போஃபா மற்றும் லூக் ஷா அடித்த கோல்களால் 2-1 என யுனைட்டட் வெற்றி பெற்றது. நடுவிலே யுனைட்டட் தடுமாறியதும், கோல் கீப்பர் டேவிட் டி கியாவின் சாகசங்களால் தப்பியதும் கவனிக்கப்பட வேண்டியவை.

பிரீமியர் லீக்: முதல் வாரத்தில் நடந்தது என்ன? - ஓர் அலசல்

செல்சி vs ஹட்டர்ஸ்பீல்டு

பயிற்சியாளர் ஆண்டோனியோ காண்டே செல்சி க்ளப்பை விட்டு பிரிந்த பிறகு, புதிதாக வந்த பயிற்சியாளர் மாரிசியோ சாரியின் முதல் போட்டி. போட்டியின் துவக்கத்தில் தடுமாறினாலும், 34வது நிமிடத்தில் ங்கோலோ காண்டே அடித்த கோல் மூலம் செல்சி முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து. ஜோர்கினோ, பெட்ரோ ஆகியோர் கோல்கள் அடிக்க, 3-0 என அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. 

பிரீமியர் லீக்: முதல் வாரத்தில் நடந்தது என்ன? - ஓர் அலசல்

டாட்டன்ஹேம் vs நியூகாஸில்

ஒவ்வொரு சீசனும் எதிர்பார்த்தை விட சிறப்பாக வளர்ந்துகொண்டே செல்லும் டாட்டன்ஹேம், இந்தமுறை நிச்சயம் கோப்பையை தட்டிச் செல்ல முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம். முதல் போட்டியில் நியூகாஸிலுடன் மோதிய அந்த அணி, 2-1 என வெற்றி பெற்றது. வெர்ட்டோங்கன் மற்றும் டெலி ஆலி அடித்த கோல்கள் மூலம்  இந்த சீசனின் முதல் வெற்றிக் கனியை டாட்டன்ஹேம் ருசித்தது.

பிரீமியர் லீக்: முதல் வாரத்தில் நடந்தது என்ன? - ஓர் அலசல்

லிவர்பூல் vs வெஸ்ட் ஹேம்

புயல் போன்ற அட்டாக் மூலம் கடந்த ஆண்டு பிரீமியர் லீக் முதல் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் வரை திணற விட்ட யர்கன் க்ளாப்பின் லிவர்பூல், இந்த சீசனின் துவக்க போட்டியில் வெஸ்ட் ஹேமை துவம்சம் செய்தது. முஹம்மது சாலா, சாடியோ மானே, ஸ்டர்ரிட்ஜ் போன்ற வழக்கமான அதிரடி வீரர்கள், முதல் போட்டியிலேயே தங்கள் பார்மை தேடிக் கொண்டனர். 4-0 என வெற்றி பெற்று, இந்த வாரம் பிரீமியர் லீகின் டாப் இடத்தில் தங்குகிறது லிவர்பூல்.

பிரீமியர் லீக்: முதல் வாரத்தில் நடந்தது என்ன? - ஓர் அலசல்

மான்செஸ்டர் சிட்டி vs ஆர்சனல்

பிரீமியர் லீக்கின் முதல் வாரத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி. ஆர்சீன் வெங்கர் இல்லாத ஆர்சனல், முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன்களுக்கு எதிராக எப்படி விளையாட போகிறதோ என்ற பயம் ரசிகர்களுக்கு. அந்த பயத்தை உறுதி செய்வது போலவே ஆர்சனலின் ஆட்டமும் அமைந்தது. சிட்டியை அட்டாக் செய்யும் திட்டமா, சிட்டியை அட்டாக் செய்ய விடாமல் நெருக்கடி கொடுக்கும் திட்டமா, இல்லை கவுன்ட்டர் அட்டாக் திட்டமா என தெரியவில்லை. எல்லாம் சேர்ந்து ஒரு கலவையாய் ஆர்சனல் விளையாட, தனது முதல் போட்டியிலேயே 19 வயது வீரர் க்வெண்டுசி சில பெரிய தவறுகளை செய்து மாட்டிக் கொண்டார். ஸ்டெர்லிங், பெர்னார்டோ சில்வா ஆகியோரின் அசத்தல் கோல்களால் எளிதாக வெற்றி பெற்று தனது சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்ற கணக்கை துவங்கியது சிட்டி.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP