பிரீமியர் லீக் ரிவ்யூ: லிவர்பூல், ஆர்சனல் கலக்கல்!

பிரீமியர் லீக் தொடரில் கடந்த இரு தினங்களில் நடந்த போட்டிகளில் லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைட்டட், ஆர்சனல், டாட்டன்ஹேம் ஆகிய அணிகள் எப்படி விளையாடின என்பதை இந்த பதிவில் ஆய்வு செய்யலாம்
 | 

பிரீமியர் லீக் ரிவ்யூ: லிவர்பூல், ஆர்சனல் கலக்கல்!

பிரீமியர் லீக் தொடரில் கடந்த இரு தினங்களில் நடந்து முடிந்த போட்டிகளின் முடிவுகளை பற்றி காணலாம்.

டாட்டன்ஹேம் vs லிவர்பூல்

பிரீமியர் லீக் ரிவ்யூ: லிவர்பூல், ஆர்சனல் கலக்கல்!

இரண்டு வார இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரும்பிய பிரீமியர் லீக்கில் முதல் போட்டியே அனல் பறந்தது. டாட்டன்ஹேம் மற்றும் லிவர்பூல் அணிகள் மோதின. தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு விளையாடி வரும் லிவர்பூல், மான்செஸ்டர் யுனைட்டட்டை பதம் பார்த்த டாட்டன்ஹேமை எதிர்கொண்ட இந்த போட்டியின் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், லிவர்பூலின் வேகத்திற்கும், அழுத்தத்திற்கும் டாட்டன்ஹேமால் ஈடு கொடுக்க முடியவில்லை. வழக்கமாக எதிரணிகளுக்கு டாட்டன்ஹேம் கொடுக்கும் ட்ரீட்மென்ட்டை, திருப்பி அந்த அணிக்கே லிவர்பூல் வழங்கியதுக்கு.. முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்று முழு ஆதிக்கம் செலுத்தியது லிவர்பூல். 90+3வது நிமிடத்தில், ஒரு ஆறுதல் கோலை மட்டுமே டாட்டன்ஹேமால் பெற முடிந்தது. 

ஆர்சனல் vs நியூகாஸில் 

பிரீமியர் லீக் ரிவ்யூ: லிவர்பூல், ஆர்சனல் கலக்கல்!

ரஃபா பெனிட்ஸின் நியூகாஸிலுடன் ஆர்சனல் மோதிய போட்டி, ரசிகர்களுக்கு நல்ல தீனியை கொடுத்தது. புதிய பயிற்சியாளர் உனாய் எமெரியின் கீழ், கடினமான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆர்சனல், அதன்பிறகு தொடர்ந்து இரண்டு வெற்றி பெற்றது. நியூகாஸில் சென்று வெற்றி பெறுவது சாதாரண காரியம் அல்ல என்பதால், முழு பலத்துடன் ஆர்சனல் இறங்கியது. முழு வீச்சில் அட்டாக் செய்து ஆர்சனல் விளையாட, கவுன்ட்டர் அட்டாக் மூலம் வெற்றி பெற திட்டமிட்டது நியூகாஸில். முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் 49வது நிமித்தில் கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பை பயன்படுத்தி சூப்பர் கோல் அடித்தார் ஜாக்கா. அதன்பின், நட்சத்திர வீரர் ஒஸில் கோல் அடித்தார். சிறப்பாக விளையாடினாலும், கடைசி நிமிடங்களில் ஒரு ஆறுதல் கோல் மட்டுமே நியூகாஸிலால் பெற முடிந்தது. 

வாட்ஃபோர்டு vs மான்செஸ்டர் யுனைட்டட்

பிரீமியர் லீக் ரிவ்யூ: லிவர்பூல், ஆர்சனல் கலக்கல்!

கோப்பையை வெல்ல போராடும் என எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் யுனைட்டட், இரண்டு போட்டிகளில் அதிர்ச்சி தோல்வியடைந்து, மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் வாட்ஃபோர்டுடன் மோதியது. சுவாரசியமான இந்த போட்டியில், இரு அணி வீரர்களும் அதிரடி காட்டி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். 35வது நிமிடத்தில் லுக்காக்கு தனது நெஞ்ஜால் பந்தை கோலுக்குள் தள்ளி முன்னிலை கொடுத்தார். அடுத்த சில நிமிடங்கலேயே, அருமையான கார்னர் கிக் மூலம் கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றது யுனைட்டட். விட முயற்சியுடன் விளையாடிய வாட்ஃபோர்டு, கிரே மூலம் 65வது நிமிடத்தில் ஒரு கோலை திரும்ப பெற்றது. 90+3 நிமிடத்தில் ஆட்டத்தின் கடைசி வினாடிகளில், ஏற்கனேவே மஞ்சள் கார்டு வாங்கியிருந்த யுனைட்டட் வீரர் மாட்டிச் மீண்டும் பவுல் செய்து ரெட் கார்டு பெற்றார். இதனால், வெற்றி பெற்றாலும், மான்செஸ்டர் யுனைட்டட் பயிற்சியாளர் முறினோ அதிருப்தியில் சென்றார். 

மான்செஸ்டர் சிட்டி vs ஃபுல்ஹேம் 

பிரீமியர் லீக் ரிவ்யூ: லிவர்பூல், ஆர்சனல் கலக்கல்!

நடப்பு சாம்பியன்கள் மான்செஸ்டர் சிட்டி, பிரீமியர் லீகிற்குள் மீண்டும் நுழைந்துள்ள ஃபுல்ஹேமை எதிர்கொண்டது. யாருமே எதிர்பார்க்காத அளவு, மிட்ரோவிச், ஷுர்லே, செரி போன்ற பிரபலமான வீரர்களை வாங்கி பலமான அணியை உருவாக்கியது ஃபுல்ஹேம். ஆனால், சாம்பியன்களின் அதிரடிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஒன்றாவது நிமிடம் முதல் ஃபுல்ஹேம் வீரர்களை, சிட்டி வீரர்கள் பதம் பார்த்தனர். 2வது நிமிடத்தில் சானே, 21வது நிமிடத்தில் டேவிட் சில்வா, 47வது நிமிடத்தில் ஸ்டெர்லிங் ஆகியோர் கோல் அடித்து 3-0 என வெற்றி பெற உதவினர். 

செல்சி vs கார்டிஃப்

பிரீமியர் லீக் ரிவ்யூ: லிவர்பூல், ஆர்சனல் கலக்கல்!

புதிய பயிற்சியாளர் மாரிசியோ சாரியின் தலைமையில்  4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த செல்சி, கத்துக்குட்டி கார்டிஃப் அணியுடன் மோதியது. 16வது நிமிடத்தில் கார்டிஃப்பின் சோல் சாம்பா கோல் அடித்து செல்சிக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அதன் பின் தங்களது அதிரடியை செல்சி வீரர்கள் காட்டினர்.37, 43, 80வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் ஈடென் ஹசார்டு ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்து செல்சி அணியை சரிவில் இருந்து மீட்டார். 82வது நிமிடத்தில் வில்லியன் ஒரு சூப்பர் கோல் அடித்து செல்சியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியால் செல்சி தற்போது பிரீமியர் லீக் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP