பிரீமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, போராடிவரும் நியூகாசில் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, லிவர்பூல் அணி கணிசமான முன்னிலை பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 | 

பிரீமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி!

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, போராடிவரும் நியூகாசில் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, லிவர்பூல் அணி பிரீமியர் லீக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டிக்கும், அதிரடியாக விளையாடி வரும் லிவர்பூல் அணிக்கும் இடையே லீக் கோப்பையை கைப்பற்றுவதற்கான போட்டி கடுமையாக உள்ளது. இந்த இரு அணிகளில் ஏதாவது ஒரு அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ள லிவர்பூல், 4 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி, நியூகாசில் யுனைட்டட் அணியுடன் மோதியது, கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நியூகாசில் அணிக்கு, போட்டியின் துவக்கத்திலேயே காத்திருந்தது அதிர்ச்சி. வெறும் 24 வினாடிகளிலேயே மான்செஸ்டர் சிட்டியின் அகுவேரோ கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து அட்டாக் செய்து பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது மான்செஸ்டர் சிட்டி. 

இந்த நிலையில், இரண்டாவது பாதியில் நியூகாஸ்டில் அணியின் ரோண்டோன் 66வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். 80வது நிமிடத்தில், மான்செஸ்டர் சிட்டி வீரர் பெர்னாண்டினோ பவுல் செய்து, நியூகாசிலுக்கு பெனால்டி வாய்ப்பை கொடுத்தார். அதை பயன்படுத்தி, நியூகாசில் அணியின் ரிட்சி கோல் அடித்து, முன்னிலை கொடுத்தார். கடைசி வரை மற்றொரு கோல் அடிக்க முடியாமல் திணறிய மான்செஸ்டர் சிட்டி, அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்று நடைபெறும் போட்டியில், லிவர்பூல் வெற்றிபெற்றால், 7 புள்ளிகள் முன்னிலை பெற்று பிரீமியர் லீக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP