பிரீமியர் லீக்: லிவர்பூலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களில் உள்ள லிவர்பூல் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல் கணக்கில் அட்டகாசமாக வெற்றி பெற்றது.
 | 

பிரீமியர் லீக்: லிவர்பூலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களில் உள்ள லிவர்பூல் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல் கணக்கில் அட்டகாசமாக வெற்றி பெற்றது.

பிரிமியர் லீக் தொடரின் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டிக்கு, அதிரடியாக விளையாடி வரும் லிவர்பூல் கடும் போட்டி கொடுத்து வருகிறது. முதலிடத்தில் உள்ள லிவர்பூல், இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில் மான்செஸ்டர் சிட்டியுடன், முக்கிய போட்டியில் நேற்று மோதியது லிவர்பூல். இந்த போட்டியில் சிட்டி தோற்றால், லிவர்பூல் அணி 10 புள்ளிகள் முன்னிலை பெற்று எட்டாத தூரத்திற்கு சென்று விடும். அதனால் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் மான்செஸ்டர் சிட்டி களமிறங்கியது. ஆரம்பம் முதல் லிவர்பூலுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர் சிட்டி வீரர்கள். முதல் அரைமணி நேரத்தில் இரு அணிகளுக்குமே நல்ல கோல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

40வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர வீரர் அகுவேரோ சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதியில் லிவர்பூலின் ஃபிர்மீனோ கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். சிறிது நேரத்திலேயே மான்செஸ்டர் சிட்டியின் சானே கோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியை தொடர்ந்து, லிவர்பூலுடனான வித்தியாசத்தை 4 புள்ளிகளாக குறைத்துள்ளது சிட்டி. 21 போட்டிகள் விளையாடியுள்ள லிவர்பூல், முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP